நேற்று இரவு பல மணி நேரம் தொடர் மழை பெய்ததால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 35-வது வார்டு வாலிபாளையம் ஸ்ரீ சக்தி திரையரங்கு அருகில் நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் விழுந்த நபரை மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியதுடன் பழுதான சாலை உடனடியாக சரி செய்ய அதிகாரிகளுக்கு தெற்கு சட்டமன்ற உறுப்பினர், திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் க.செல்வராஜ் எம் எல் ஏ. உத்தரவிட்டார்.
மாநகராட்சி அதிகாரிகள் வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தின் போது அ.இ.தொமுச துணை தலைவர்,தெற்கு மாநகர திமுக செயலாளர் டி.கே.டி.மு.நாகராசன்,மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்ரமான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment