அவிநாசி ஊராட்சி ஒன்றியத்தில் அவிநாசி அருகில் உள்ள பழங்கரை ஊராட்சியை திருப்பூர் மாநகராட்சி உடன் இணைக்க கூடாது என்றும் பழங்கரை ஊராட்சியை அவிநாசி பேரூராட்சி உடன் இணைத்து அவிநாசியை நகராட்சியாக தரம் உயர்த்திடு எனக்கேட்டும், அல்லது பழங்கரை ஊராட்சியை தனிப் பேரூராட்சியாக தரம் உயர்த்த கேட்டு,
தமிழக அரசை வலியுறுத்தி
பழங்கரை ஊராட்சிக்குட்பட்ட பெரியபாளையம், பச்சாம்பாளையம், வேலூர்,ஆயிக்கவுண்டம்பாளையம்,நல்லிக்கவுண்டம்பாளையம், தேவம்பாளையம், குளத்துப்பாளையம், அவினாசிலிங்கம் பாளையம் ,இந்திரா காலனி, ராஜ்நகர், சந்தைப்பேட்டை, உடள்ளிட்ட அனைத்து கிராமங்களிலும் முழுமையாக கடைகளை அடைத்தும்
பனியன் நிறுவனங்களில் வேலை நிறுத்தம் செய்தும், அனைத்து இடங்களிலும் கருப்பு கொடி கட்டி தமிழக அரசுக்கு கவன ஈர்ப்பு போராட்டத்தை பழங்கரை ஊராட்சிக்குட்பட்ட அனைத்து அரசியல் கட்சிகள்,
வணிக நிறுவனங்கள், பழங்கரை ஊராட்சி மன்றம் மற்றும்
பொதுமக்கள், சமூக நல அமைப்புகள் சார்பாகவும் சிறப்பான முறையில் வேலை நிறுத்தம் கடை அடைப்பு நடைபெற்றது.
மேலும் தமிழக அரசு மேற்கண்ட
கோரிக்கை மீது நல்ல முடிவு எடுக்கும் என்று அனைத்து கட்சிகள் சார்பில் எதிர் பார்க்கிறோம். இந்த பிரச்சினையில் தமிழக அரசு நல்ல முடிவு எடுக்கவில்லை என்றால் அனைத்து கட்சிகளும் கூடி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்வோம் என்பதை தெரிவித்து கொள்கிறோம் என்று இந்த கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment