தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, சொத்து வரி உயர்வு, மின்சார கட்டண உயர்வு, விலை வாசி உயர்வு தமிழக அரசை கண்டித்து
திருப்பூர் 26 வது வார்டு அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது
அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைப்படி திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி முருகம்பாளையம் பகுதி கழகம் சார்பில் 26 வது வார்டில் முருகம்பாளையம் பகுதி கழக செயலாளர் கண்ணன் அவர்கள் தலைமையில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட இணை செயலாளர் கே. சிலம்பரசன் முன்னிலை வகிக்க மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பகுதி கழக நிர்வாகிகள், வார்டு நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியினர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் தமிழக அரசை கண்டித்து தொடர் முழக்கங்கள் எழுப்பப்பட்டது. நிகழ்வின் போது முருங்கப்பாளையம் பகுதி கழக செயலாளர் கண்ணன் அவர்களும் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட இணை செயலாளர் கே. சிலம்பரசன் ஆகியோர் கூறியதாவது
கடந்த 40 மாத காலமாக தமிழக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதற்கு காரணமான திமுக அரசை கண்டித்தும் தொடர்ந்து வரி விகிதத்தை ஏற்றி வருவதாலும், பத்திர பதிவு கட்டணங்களை உயர்த்தியதாலும் பொதுமக்கள் மிகுந்த சிரமங்களை அடைவதாகவும் உயர்த்திய சொத்து வரியை திரும்ப பெற வேண்டும் என்று திருப்பூர் மாநகராட்சியை கண்டித்தும் விடியா திமுக அரசை கண்டித்து இந்த மனித சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டத்தில் பெண்கள், பொதுமக்கள் அதிமுக கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு விடியா திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த மனித சங்கிலி போராட்டத்திற்கு ஆதரவளித்து கலந்து கொண்டதற்கும் பொதுமக்கள் மற்றும் அதிமுகவினர் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்கள்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment