திருப்பூர் எஸ்டிபிஐ வடக்கு மாவட்டம் வடக்கு தொகுதி தலைவர் என். முஹம்மது அலி ஜின்னா அவர்களின் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைப்பெற்றது.
தொகுதி செயலாளர் எப் .மைதீன் பாஷா, தொகுதி பொருளார் ஜி. நவீத் , தொகுதி துணை தலைவர் எம்.அபிபுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். எஸ்டிபிஐ திருப்பூர் வடக்கு மாவட்டம் வடக்கு தொகுதி செயற்குழு கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் வி.கேன்.பாபு அவர்களும் மற்றும் எஸ்டிபிஐ கட்சியின் வடக்கு மாவட்ட துணை தலைவர் சத்தார் அவர்களும் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்கள்.
தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்தும், மாதந்தோறும் மின் அளவீடு முறையில் கணக்கீடு செய்ய வலியுறுத்தியும் வருகின்ற அக்டோபர் 18. அன்று மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.
திருப்பூர் வடக்கு மாவட்டம், வடக்கு தொகுதிகளில் அதிகமான கிளைகளை உருவாக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. எஸ் டி டியு கோவை மண்டலம் நடத்தும் உழைப்பாளர் உரிமை மீட்பு மாநாட்டிற்கு அதிகமான நபர்களை அழைத்து செல்வது என்று திருப்பூர் வடக்கு தொகுதி சார்பாக தீர்மானிக்கப்பட்டது.
இறுதியாக தொகுதி செயலாளர் மைதீன் பாஷா நன்றி உரையாற்றினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment