திமுக அரசை கண்டித்து, உயர்த்தப்பட்ட சொத்துவரி, மின் கட்டணம் தொழில் வரி திரும்ப பெற வலியுறுத்தி அஇஅதிமுக உடுமலைபேட்டை அடுத்த சூளேஸ்வரம்பட்டி பேரூராட்சியில் பொள்ளாச்சி அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர். எஸ்.நாகூர் சோமசுந்தரம். தலைமையில் பொள்ளாச்சி பகுதி செயலாளர். ஆவல்பட்டி நடராஜ், சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி செயலாளர் பி.நரிமுருகன் ஆகியோரின் முன்னிலையில் திமுகவை கண்டித்து சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு முன்பு மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட இலக்கிய அணி செயலாளர் பி.ஆர்.பாண்டியன், கே.செல்வராஜ், ஆட்டோ கமால், மக்கள் சேவகன் மஜீத் சரவணன், சின்னகுட்டி, பைனான்ஸ் கணேஷ், பூக்கடை மணிகண்டன், வால்பாறை நடராஜ் ஆறுவேல், குணா, மோதிராபுரம் சக்தி, cdc ராஜேந்திரன் அருண், மற்றும் கட்சி நிர்வாகிகள் மற்றும் அதிமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment