திருப்பூர் ரோஸ் கார்டன் பகுதி மக்கள் தார் சாலை வசதி கேட்டு பேரிடம் மனு கொடுத்தனர் இந்த மனுவில் திருப்பூர் ரோஸ் கார்டன் பகுதியில் சுமார் 80க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 10 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர் இந்த பகுதியில் ஏ பிளாக் முதல் டி பிளாக் வரை தார் சாலை வசதி இல்லாமல் கரடு முரடான சாலையில் பயணிக்க வேண்டிய உள்ளது இந்த சாலையில் பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் வரை கீழே விழுந்து காயம் ஏற்படும் அளவிற்கு அபாயகரமாக உள்ளது இது பற்றி பல மனுக்களை கணபதி பாளையம் ஊராட்சி மன்ற செயலாளர் அவர்களிடம் பலமுறை கொடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை மற்றும் காங்கேயம் வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களிடம் நாங்கள் பலமுறை கடந்த ஐந்து ஆண்டுகளாக அடிப்படை வசதி கார் சாலையை கேட்டு போராடி கொண்டிருக்கிறோம் இதுவரை யாரும் எந்தவித நடவடிக்கையும் எடுத்து சாலையை சீரமைப்பு செய்யவில்லை மேலும் இந்த இடத்திற்குரிய அனைத்து சாலைகளும் கடந்த 2011 ஆம் ஆண்டு தான கிரைய செட்டில்மெண்ட் செய்யப்பட்டுள்ளது இதற்கு உண்டான ஆவணங்கள் இந்த மனுவில் இணைக்கப்பட்டுள்ளது. ஆகவே திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எங்களுடைய இந்த கோரிக்கை மனுவிற்கு நல்ல தீர்வை ஏற்படுத்தி தார் சாலை வசதியை செய்து தருமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று இந்த மனுவில் கூறியுள்ளனர். இந்த நிகழ்வில் எஸ்டிபிஐ கட்சி காங்கேயம் தொகுதி தலைவர் ராஜா முஹம்மது,
மகபூப்பாஷா, திப்புசுல்தான், இப்ராஹிம், வெங்கடேஷ் மற்றும் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment