திமுக கிணத்துக்கடவு தேர்தல் பார்வையாளராக நியமனம் செய்தமைக்கு வடக்கு மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் முதல்வருக்கு நன்றி தெரிவித்தார் - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 15 October 2024

திமுக கிணத்துக்கடவு தேர்தல் பார்வையாளராக நியமனம் செய்தமைக்கு வடக்கு மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் முதல்வருக்கு நன்றி தெரிவித்தார்



திருப்பூர்  வடக்கு மாவட்ட விவசாய அணி அமைப்பாளரான மு.ரத்தினசாமி அவர்களை கிணத்துக்கடவு தேர்தல் பார்வையாளராக நியமித்தமைக்கு முதல்வர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டார் இது பற்றி அவர் கூறியதாவது கோவை தெற்கு தொகுதியில்  கிணத்துக்கடவு பொறுப்பாளராக என்னை நியமித்த தமிழக முதல்வர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் இளைஞர்களின் எழுச்சி நாயகன் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சரும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் என்னை இப்பதவிக்கு பரிந்துரைத்த மரியாதைக்குரிய வடக்கு மாவட்ட திமுக  செயலாளர் திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான  க. செல்வராஜ் அவர்களுக்கும் திருப்பூர் வடக்கு மாநகர செயலாளர்  மேயர் ந.தினேஷ் குமார் அவர்களுக்கும் தெற்கு மாநகர  செயலாளர் டி. கே.டி.மு.நாகராசன் அவர்களுக்கும் பரிந்துரைத்ததற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் அது சமயம் கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர்  மரியாதைக்குரிய தளபதி முருகேஷ் அவர்களை நேரிலே சந்தித்து தொகுதிக்கு உட்பட்ட பொறுப்பாளர்கள் பட்டியலை பெற்று அவர்களின் வாழ்த்துக்களை பெற்றேன் இந்த நிகழ்வில் திமுக நிர்வாகிகள் சண்முகம், மகேந்திரன், செந்தில்குமார், மணிமாறன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad