தமிழ்நாடு அரசு துணை முதலமைச்சர் ஆக உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பொறுப்பு ஏற்றதை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் பல்வேறு வகைகளில் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் திருப்பூர் 14 வது வார்டுக்கு உட்பட்ட அனுப்பர்பாளையத்தில் வடக்கு மாவட்ட விவசாய அணி அமைப்பாளரும்,14 வது வட்ட திமுக செயலாளருமான மு. ரத்தினசாமி அவர்கள் தலைமையில் தளபதி ஆட்டோ ஸ்டாண்ட் (தொமுச) ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் ஆட்டோ முனீஸ், ஆட்டோ பாலு, ஆட்டோ விக்னேஷ், ஆட்டோ விஜய், ஆட்டோ எம் எஸ் கார்த்தி, கிரி, சரத்குமார், கணேசன், 14 வது வார்டு லோகநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டு பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர். பின்னர் அந்த பகுதியில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment