திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட் சியின் சார்பில் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் தென்னரசு தலைமையில் நல்லிணக்க நடைபயணம் வடதாரை காமராஜபுரத்தில் தொடங்கியது. காங்கிரஸ் தேசிய செயலாளரும் கர்நாடகா மாநில முன்னாள் முதல்வர் தேவராஜ் அர்சு பேரனுமான சூரஜ் ஹெக்டே கலந்துகொண்டு பேரணியை தொடங்கி வைத்தார்.
காமராஜபுரத்தில் இருந்து கோவை ரோடு, சின்ன கடை வீதி, பெரிய கடைவீதி, பூக்கடைக்கார்னர் வழியாக காங்கி ரஸ் கட்சியினர் 500-க்கும் மேற்பட்டோர் தலையில் தொப்பி அணிந்தும் கையில் காங்கிரஸ் கொடி ஏந்தியும், மத்திய பா.ஜனதா அரசிற்கு எதிராக கோஷமிட்ட வந்தனர்.
பழைய நகராட்சி அலுவலகம் முன்பு உள்ள காந்தி சிலையில் பேரணி முடிவடைந்தது. அங்கு காந்தி சிலைக்கும், காமராஜர் உருவப்படத்திற்கும் மாலை அணிவித்தனர்.
காங்கிரஸ் தேசிய செயலாளர் சூரஜ் ஹெக்டே பேசும் போது "தாராபுரத்தில் நடைபெற்ற நல்லிணக்க பேரணி என்பது காந்திய கொள்கை வழியில் அகிம்சை, சுதேசி மற்றும் தீண்டாமையை நீக்குதல் போன்ற கொள்கைகளை கொண்டது.
ஒருகட்சி ஆட்சியில் இருக்கும் போது ஜாதி, மதம், மொழி இனம் பார்க்க கூடாது. அப்படி இருப்பவர்களே இந்தியர்கள் என காந்தியடிகள் கூறினார்கள்.
ஆனால் தற்போது இந்தியாவை ஆண்டுகொண்டிருக்கும் மத்திய பா:ஜனதா அரசு மதம், மொழி, ஜாதி ஆகியவற்றை முன்னெடுத்து செல்கிறது. இதை தவிர்க்க வேண்டுமானால் ஒரே இந்திய மக்களாக இருக்க வேண்டும். என்றார். இதில் தேசிய செயலாளர்கள் ராம்மோகன், கோபிநாத், மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் காணப்பிரியா, நகரத்தலைவர் செந்தில்குமார், வட்டாரத்தலைவர்கள் முத்துக்குமார், அசோக் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment