உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு ஐயா அவர்களின் 40 வது நினைவு தினம் வருகின்ற டிசம்பர் 21 திருப்பூர் பிரிட்ஜ்வே காலனியில் உள்ள அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தில் தலைமை அலுவலகத்தில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிகளை சிறப்பான முறையில் நடைபெற அனைத்து கிளைகளிலும் சங்க நிறுவன தலைவர் ஜி.கே.விவசாய மணி (எ) ஜி. சுப்பிரமணி அவர்கள் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெறுகிறது. அதன் தொடர்ச்சியாக மேட்டுப்பாளையம் தொகுதி சிறுமுகை அலுவலகத்தில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது . இதில் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு சங்க தலைவர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment