திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியம் பழங்கரை ஊராட்சி அவினாசிலிங்கம் பாளையம் தங்கம் கார்டனில் குடியிருக்கும் பனியன் தொழிலாளியான ராஜா, சுசீலா ஆகியோரின் மகன் சபரி ஆனந்த் ஏழாம் வகுப்பு படிக்கிறார்.
சபரி ஆனந்துக்கு முதுகு தண்டுவட நோயால் இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டு தாய் தந்தை மற்றும் பாட்டி ஆகியோரின் உதவியுடன் தான் அனைத்து பணிகளையும் செய்கிறார்.
நடக்க முடியாத நிலையில் மாற்றுத் திறனாளியாக இருந்து கொண்டு அவிநாசிலிங்கம் பாளையம் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார் .
கடந்த மூன்று ஆண்டுகளாகவே அவருக்கு இயற்கையாகவே நீச்சல் பயிற்சியில் ஆர்வம் ஏற்பட்டதன் விளைவாக நீச்சலில் மிகச் சிறப்பாக நீந்தி பரிசுகளை வென்ற நிலையில், மாவட்ட அளவிலும் ,
மாநில அளவிலும் தங்கப்பதக்கம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பரிசுகளை வென்றார் .
தற்போது கடந்த ஒரு வாரமாக அகில இந்திய அளவிலான மாற்று திறனாளிகளுக்கான நீச்சல் போட்டி கோவா மாநிலத்தில் நடைபெற்றது .
கோவா மாநிலத்தில் நடைபெற்று முடிந்த மாற்று திறனாளிகளுக்கான நீச்சல் போட்டியில் 100 மீட்டர் 50 மீட்டர் என மூன்று பிரிவுகளில் போட்டியிட்டு மூன்று தங்க பதக்கங்களை வென்று அகில இந்திய அளவில் சாதனை படைத்துள்ளார் .
இதுபற்றி பள்ளியின் முன்னாள் மாணவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அவினாசி ஒன்றிய துணை செயலாளருமான வி.கோபால் அவர்கள் கூறியதாவது
சபரி ஆனந்த் மாற்று திறனாளியாக இருந்தாலும் தன்னுடைய விடா முயற்சியாலும் நம்பிக்கையாலும் தொடர்ந்து நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு இன்றைக்கு அகில இந்திய அளவில் 3 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.
தொடர்ந்து சர்வதேச விருதுகளை பெற வாழ்த்துகிறோம்.
தொடர்ந்து நீச்சல் போட்டியில் கலந்து கொள்வதற்கும் பள்ளிக்கு செல்வதற்கும் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் அவரது தந்தை ராஜா
தாயார் சுசீலா முதியவர் பாட்டி சிவகாமி பழனியப்பன் ஆகியோருடைய பங்களிப்பும் உதவிகளும், பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர்களின் ஊக்குவிப்பும் தான் மாற்றுத்திறனாளி மாணவன் சபரி ஆனந்த் வெற்றிக்கு உதவியுள்ளது என்பதை மறுக்க முடியாது.
அகில இந்திய அளவில் மாற்றுத்திறனாளி மாணவன் சபரி ஆனந்த் மூன்று தங்க பதக்கங்களை பெற்றது அவிநாசிலிங்கம் பாளையத்திற்கும், மாணவன் படிக்கும் அவிநாசிலிங்கம் பாளையம் அரசு நடுநிலை பள்ளிக்கும் கிடைத்த பெருமையாகும் இவ்வாறு கூறினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment