தொமுச பேரவையின் அகில இந்திய துணை தலைவராக திருப்பூர் டி.கே. டி.மு.நாகராசன் நியமனம். திமுகழக தொமுச பேரவையின் அகில இந்திய துணை தலைவராக திருப்பூர் டி.கே.டி.மு. நாகராசன் அவர்களை திமுக தலைமை அறிவித்துள்ளது.
இதையொட்டி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் திமுக தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவையின் அகில இந்திய துணை தலைவராக நான் (தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு. நாகராசன்) நியமிக்க பட்டுள்ளேன் இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் துணை முதலமைச்சர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் கழக பொதுச்செயலாளர் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன் இதேபோல் என்னை இப்பதவிக்கு பரிந்துரைத்த தொமுச பேரவையின் அகில இந்திய பொது செயலாளர் சண்முகம் எம்பி மற்றும் தொமுச பேரவையின் அகில இந்திய தலைவர் கி.நடராசன் , திருப்பூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் , தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் எம் எல் ஏ ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment