தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் வடக்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் க. செல்வராஜ் எம்எல்ஏ சேலைகள் வழங்கினார். திருப்பூர் வடக்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் பழைய பேருந்து நிலையம் அருகே இருக்கும் அருள்மிகு சோழாபூரி அம்மன் சிவ துர்க்கை அம்மன் திருக்கோவிலில்
திமுக வடக்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் திருமதி கலைச்செல்வி அவர்களது ஏற்பாட்டில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு அறுசுவை அன்னதானம் வழங்கி சேலை மற்றும் தீபாவளி இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்வில் வடக்கு மாவட்ட செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் எம்எல்ஏ அவர்கள் விழாவினை துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் வழக்கறிஞர் நந்தினி. மாநகர அவை தலைவர் ஈஸ்வரமூர்த்தி.மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ஆனந்தி.
3 வது வார்டு செயலாளர் மூர்த்தி. திராவிட பாலு. வடக்கு தெற்கு மாநகர மகளிர் அணி அமைப்பாளர்கள், மகேஸ்வரி, சுகாசினி, உமா மகேஸ்வரி, கௌரி மகளிர் தொண்டரணி துணை தலைவி விஜயா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், மகளிர் அணியினர், மகளிர் தொண்டரணியினர் நூற்றுக்கு மேற்பட்டோர் பங்கேற்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா. ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment