தாராபுரம் திமுக நகர செயலாளர் சு.முருகானந்தம் வீடு வீடாக சென்று இளைஞரணி புதிய உறுப்பினர்களை சேர்த்தார்.
திருப்பூர் தெற்கு மாவட்டம் தாராபுரம் நகர திமுக சார்பில் நகர கழக செயலாளர் சு.முருகானந்தம் B.E.MC., அவர்கள் தலைமையில் (3-10-2024)காலை 6.30 மணி முதல் இல்லம் தேடி சென்று இளைஞர் அணி உறுப்பினர் அட்டை வழங்குதல் மற்றும் புதிய உறுப்பினர் சேர்த்தல், மகளிர் அணி உறுப்பினர் சேர்த்தல் ஆகிய பணிகள் 22 வது வார்டு கிளையில் நடைபெற்றது. உடன் கழக நிர்வாகிகள், இளைஞர் அணியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment