திருப்பூரில் ஆதரவற்ற பெண்ணின் குடும்பத்திற்கு உதவி கரம் நீட்டிய இந்திரா சுந்தரம் தொண்டு நிறுவனம் - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 20 October 2024

திருப்பூரில் ஆதரவற்ற பெண்ணின் குடும்பத்திற்கு உதவி கரம் நீட்டிய இந்திரா சுந்தரம் தொண்டு நிறுவனம்


 திருப்பூர் சின்னகரை அருகில் உள்ள அறிவொளி நகர் பகுதியில் உள்ள தமிழ்நாடு நகர்புற மேம்பாடு திட்டம் குடியிருப்பில் வசிக்கும் கணவனால் கைவிடப்பட்ட இரண்டு குழந்தைகள் உள்ள ரம்ஜான்பேகம் என்ற பெண்ணுடைய  இல்லத்திற்கு புதிய மின் இணைப்பு பெற அதற்கு தேவையான அதன் மின் சாதன பொருட்கள் , ஒயர்கள், பைப்புகள், மின் விசிறிகள் உள்ளிட்ட  ரூபாய் 20,000 மதிப்புள்ள பொருட்களை திருப்பூர் இந்திராசுந்தரம் தொண்டு நிறுவனம் சார்பாக வழங்கப்பட்டது.


இந்த நிகழ்வில் சமூக சேவகி நிறுவனர் இந்திரா சுந்தரம் அவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஏழ்மையான மக்களுக்கும், பள்ளி மாணவ மாணவிகளுக்கும், மாற்று திறனாளிகளுக்கும், மற்றும் பேரிடர் காலங்களில் தன்னால் முடிந்த உதவிகளை தயங்காமல் செய்யும் இந்திரா சுந்தரம் தொண்டு நிறுவன த்தின் நிறுவனர் இந்திரா சுந்தரம் அவர்களையும் அவருடன் துணை நிற்கும் நிர்வாகிகளையும் அந்த பகுதி மக்கள்  பாராட்டி நன்றி தெரிவித்தனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜா மைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad