ஐந்து தலைமுறைகள் கண்ட 101 வயது தாத்தாவிற்கு பிறந்தநாள் கொண்டாடி மகிழ்ந்த கொள்ளு பேரன் பேத்திகள். - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 21 November 2024

ஐந்து தலைமுறைகள் கண்ட 101 வயது தாத்தாவிற்கு பிறந்தநாள் கொண்டாடி மகிழ்ந்த கொள்ளு பேரன் பேத்திகள்.


திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சேர்மன் தெருவில் வசித்து வருபவர் கோவிந்தராஜ். ஆங்கிலேயர் காலத்தில் இருந்து முன்னாள் நகராட்சி உதவியாளராக பணியாற்றி வந்த இவர் தற்பொழுது ஓய்வு பெற்று தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் தனது இளைய மகன் மற்றும் மூத்த மகனின் பேரன் பேத்திகள் உள்ளிட்டோருடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.


நூற்றி ஒரு வயது ஆனாலும் தன்னுடைய பணிகளை தானே செய்து கொண்டு நல்ல நிலையில் பேசி வரும் இவர் தனது உறவினர்கள் உடன் பொழுதை கழிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். இவரது பேரன் பேத்திகள் என அனைவரும் இவர் மீது மிகுந்த பாசத்துடன் உள்ளனர்.


இன்றுடன் தாத்தா கோவிந்தராஜிக்கு 101 வயது நிறைவடைவதை முன்னிட்டு அவரின் மகன், பேரன், பேத்தி, கொள்ளு பேரன் என 56 பேர் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரியும் உறவினர்கள் இணைந்து தாத்தாவிற்கு பிறந்தநாள் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த நிகழ்ச்சியில் தாத்தாவின் உறவினர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு வெகு விமரிசையாக கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்

No comments:

Post a Comment

Post Top Ad