திருப்பூர் பிரிட்ஜ்வே காலனியில் அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் நிறுவன தலைவர் ஜி. கே.விவசாய மணி என்கின்ற ஜி. சுப்பிரமணி அவர்கள் தலைமையில் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கலந்தாய்வு கூட்டத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, புதிய கிளைகள் உருவாக்குவது சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் தொழிலாளர்களின் பிரச்சனைகள் கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்பட்டது நிர்வாகிகளுக்கும், தொழிலாளர்களுக்கும், உறுப்பினர்களுக்கும் சங்க நிறுவன தலைவர் ஜி.கே.விவசாய மணி அவர்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது தொழிலாளர்கள் தங்களது வருமானத்திற்கு ஏற்றவாறு திட்டமிட்டு செயல்பட வேண்டும். குழந்தைகள் படிப்பு, எதிர்கால சேமிப்பு இது எல்லாம் திட்டமிட்டு கடைபிடிக்க வேண்டும் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைபட கூடாது, ஆன்லைன் கடன் நிறுவனங்களிடம் கடன் வாங்க கூடாது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளையும் அதில் உள்ள பிரச்சினைகளையும் எடுத்து கூறினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா. ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment