திருப்பூர் காலேஜ் ரோடு பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் கடந்த இரண்டு நாட்களாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வந்தது இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் மாநில அளவில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு வரப்போகும் தேர்தலுக்கான பணிகள் குறித்தும் கடந்த மூன்று ஆண்டுகால செயல்பாடுகள் குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது இதைத் தொடர்ந்து மாநில தலைவர் நெல்லை முபாரக் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது மாநில தேசிய அரசியல் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாகவும் 25 தீர்மானங்கள் மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கையாக வைக்கப்பட்டுள்ளதாகவும் நீட் தேர்வு ரத்து தொடர்பாக தமிழக அரசு சட்டரீதியாக கடந்த மூன்று ஆண்டுகாலமாக நடவடிக்கை எடுக்கவில்லை மாணவர்களின் பலனை கருத்தில் கொண்டு உடனடியாக நீட் தேர்வு ரத்துக்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக உடனடியாக மாநில கல்விக் கொள்கை அமல்படுத்த வேண்டும், உள்ளிட்ட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தமிழகம் முழுவதும் போதை வஸ்துக்கள் அதிகரித்துள்ளது தமிழக முதல்வர் மு .க. ஸ்டாலின் அறிக்கை மட்டுமே வெளியிடுகிறார் என்றும் களத்தில் ஆய்வு செய்வதில்லை என்றும் குற்றச்சாட்டு களை கூறினார்.மேலும் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் தொடர்ந்து அதிமுக கூட்டணியில் பங்கேற்போம் மாபெரும் வெற்றி பெறுவோம் என்று கூறினார் அப்போது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் உடன் இருந்தனர்..
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment