திருப்பூர் மாநகராட்சி 22 வது வார்டுக்கு உட்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கும், குடிநீர் பணியாளர்களுக்கும், தெருவிளக்கு பராமரிப்பாளர்களுக்கும்,மற்றும் சுகாதார பிரிவு பணியாளர்களுக்கும், 22 வது வார்டு மாமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தீபாவளி பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவிற்கு 22 வது வார்டு மாமன்ற உறுப்பினர் வி. ராதாகிருஷ்ணன் அவர்கள் தலைமை ஏற்று அனைத்து மாநகராட்சி பணியாளர்களுக்கும் தீபாவளி பரிசுகள் வழங்கினார். நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் ப.குணராஜ் , 22 வது வார்டு செயலாளர் V.ராஜ்குமார், திருப்பூர் மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் செ.குப்புசாமி, திருப்பூர் வடக்கு மாநகர தொழிலாளர் அணி அமைப்பாளர் கே. பழனிச்சாமி,
திருப்பூர் வடக்கு மாநகர சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் ஆர். வேலுசாமி திருப்பூர் வடக்கு திமுக மாணவரணி விஜய சிம்ம ராஜா, திமுக நிர்வாகிகள் குட்டியப்பன், தங்கராஜ், பாலசுப்ரமணியம், திருமூர்த்தி, ஆறுமுகம், ராஜேஷ், கண்ணன், ஸ்கூல் வீதி குமார், காலேஜ் ரோடு மோகன், குமரேசன், பழனிச்சாமி, மற்றும் துப்புரவு மேற்பார்வையாளர்கள் சந்திரிகா, சுதாகர், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் 300க்கும் மேற்பட்டோருக்கு தீபாவளி பரிசுகள் வழங்கப்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் காஜா மைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment