திருப்பூர் விஜயமங்கலத்தில் நடுப்பட்டி கிராமத்தில் உள்ள அம்மாவசை என்ற மாற்றுதிறனாளி குடும்பத்திற்கு தீபாவளிக்கு புத்தாடைகள், இனிப்பு வகைகள் இந்திராசுந்திரம் தொண்டு நிறுவனம் சார்பாக நிறுவனர் இந்திராசுந்தரம் அவர்கள் நிர்வாகிகளுடன் நேரில் சென்று வழங்கினார்கள்.
மாற்றுதிறனாளி அம்மாவாசை குடி
இருக்கும் வீடு பர்பதற்கே மிக மிக மோசமான நிலையில் இருந்தது கண்டு வேதனைப்பட்டார்.
அம்மாவாசையின் அப்பா, அம்மா காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்.
மாற்று திறனாளி அம்மாவாசையின் பெற்றோர்கள் இந்திரா சுந்தரம் அவர்களிடம் மோசமான நிலையில் உள்ள வீட்டை சரி செய்து தரும்படி கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்தார்கள்.
இந்த வேண்டுகோளை ஏற்று நிச்சயமாக சரி செய்து தருகிறேன் என்று இந்திரா சுந்தரம் அவர்கள் உறுதியளித்தார்.
இது கேட்டு அங்கு இருந்த அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment