திருப்பூர் மாநகராட்சி ஒன்றாவது மண்டலம் பத்தாவது வார்டு துவக்கப்பள்ளி அருகில் இடத்தில் தனியார் குப்பை சேகரிக்கும் நிறுவனம் பெரிய கண்டெய்னர் ஒன்றை இறக்கி வைத்துள்ளனர் அதில் குப்பை போட்டு அப்புறப்படுத்தும் பணிகளை செய்கின்றனர் மேலும் இந்த கண்டைனர் பள்ளியைத் தாண்டி பாலத்தின் அருகில் வைக்கப்பட்டிருந்தது தற்போது மாற்றி வைக்கப்பட்டுள்ளது இதனால் வாகன போக்குவரத்து நெருக்கடியும் துர்நாற்றமும் வீசி கொண்டிருக்கிறது பாலத்தின் அருகில் வைத்தால் அது ஓரமாக இருப்பதால் வாகனங்கள் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் இருந்தது. இப்போது வைக்கப்பட்டுள்ள இடத்தின் எதிர் ரோட்டில் பள்ளி குழந்தைகள் பயணிக்கும் பகுதியாகும் இதற்கு அருகில் அரசு துவக்க பள்ளியும் உள்ளது இதை மாற்றி பழையபடி பாலத்தின் அருகே வைக்க வேண்டும் என்பது பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கையாகும்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர்
அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment