சமீபத்தில் வெளியாகிய அமரன் திரைப்படத்தில் இஸ்லாமிய சமூகத்தை குறிவைத்து நச்சு கருத்துக்கள் மற்றும் இஸ்லாமிய சமூகத்தினரை தீவிரவாதி போன்று சித்தரித்த அமரன் திரை படத்தை தடை செய்ய வேண்டும் மேலும் படத்தை
தயாரித்த கமலஹாசன் இன்டர்நேஷனல் ஃ பிலிம்ஸ் நிறுவனத்தை தடை செய்ய கோரி எஸ்டிபிஐ கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
இந்த முற்றுகை போராட்டம் திருப்பூர் தெற்கு தொகுதி தலைவர் அன்வர் பாஷா தலைமையில் நடைபெற்றது திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் வி கேன் பாபு முன்னிலையில் மாவட்ட பொருளாளர் ஜாபர் சாதிக், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜாபிர் அகமது , தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சுலைமான் பாபு, விம் இந்தியா மூவ்மெண்ட் மாவட்ட செயலாளர் சபிதா பஷீர், தெற்கு தொகுதி துணை தலைவர் ஷேக் அலாவுதீன், மாவட்ட வர்த்தக அணி தலைவர் அக்பர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் காஜா, வடக்கு தொகுதி தலைவர் முகமது அலி ஜின்னா மற்றும் மாவட்ட, தொகுதி, கிளை, நிர்வாகிகள் பங்கேற்று கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டோரை
காவல்துறை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர் பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment