திருப்பூர் மாநகர காவல் ஆணையராக லட்சுமி ஐபிஎஸ் அவர்கள் சில மாதங்களுக்கு முன்பு பொறுப்பேற்றார் உடனடி நடவடிக்கையாக 24 மணி நேரமும் இயங்கி வந்த டாஸ்மாக் மதுக்கடைகளை பார்களையும் அரசு அறிவித்த நேரங்களில் மட்டும் திறந்து வியாபாரம் செய்ய உத்தரவிட்டும் ஹான்ஸ் விற்பனை செய்யும் கடைகளை அதிரடியாக அபராதம் விதித்து மூடப்பட்டது. காவல்துறை ஆணையர் லட்சுமி அவர்களின் இந்த நடவடிக்கையால் மாநகரம் முழுவதும் மது விற்பனை நேரங்கள் ஒழுங்கு படுத்தியும் ஹான்ஸ் விற்பனை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது . காவல்துறையினரை தொடர் கண்காணிப்பில் ஈடுபடுத்தி ஹான்ஸ் விற்பனை தடை செய்யப்பட்டது. இந்த நடவடிக்கைகளை பொது மக்கள் பெண்கள் சமூக ஆர்வலர்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர் இந்த நிலையில் தற்போது பெரியார் காலனி பஸ் ஸ்டாப் சிக்னல் அருகில் அரசு இடத்தை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள பெட்டி கடையில் அதிகாலை முதல் இரவு வரை ஹான்ஸ் மட்டும் விற்கப்படுகிறது. இந்த கடை அருகில் போக்குவரத்தை ஒழுங்கு செய்ய காவல் துறையினர் காலை முதல் இரவு வரை இருக்கின்றார்கள்
இதேபோல் ஏவிபி ரோடு பி என் ரோடு இணைப்பு சாலை வெங்கமேடு பிரிவு அருகில் உள்ள பேக்கரியில் வாடகைக்கு விடப்பட்டுள்ள பெட்டி கடையில் காலை முதல் இரவு வரை ஹான்ஸ் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது இதை திருப்பூர் மாநகர காவல்துறை ஆணையர் லட்சுமி அவர்களின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் பொதுமக்களின் கோரிக்கையாகும்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment