கோவை மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைக்கவும் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைக்கவும் வருகை புரிந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களிடம் கோவை மாவட்ட நிர்வாகிகளுடன் சந்திப்பு என்ற நிகழ்வில் கிணத்துக்கடவு தொகுதி தேர்தல் பணி பொறுப்பாளர் திருப்பூர் மு. ரத்தினசாமி அவர்கள் கிணத்துக்கடவு தொகுதி தேர்தல் பணி பொறுப்பாளர் என்ற முறையில் கிணத்துக்கடவு தொகுதிக்கு உட்பட்ட சில கோரிக்கைகளை அடங்கிய மனுவை முதல்வர் அவர்களிடம் வழங்கினார். மேலும் கிணத்துக்கடவு தொகுதி தேர்தல் பணி பொறுப்பாளராக தன்னை நியமனம் செய்தமைக்கு முதல்வரிடம் நன்றி கூறி வாழ்த்துக்களை பெற்றார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா. ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment