திருப்பூர் எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கலை கல்லூரியில் புதிய வகுப்பு அறைகள், ஆய்வகங்கள், உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக தெற்கு எம் எல் ஏ அடிக்கல் நாட்டினார்.
உயர் கல்வித் துறை சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் ரூ.1910- 00 லட்சம் மதிப்பீட்டில் எல் ஆர் ஜி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் கூடுதலாக 28 வகுப்பறைகள், 12 ஆய்வகங்கள், பல்நோக்கு திறந்தவெளி அரங்கம், காங்கிரீட் சாலை அமைத்தல், விளையாட்டு மைதானம் மற்றும் தண்ணீர் வசதிகளை மேம்படுத்தும் பணிகளுக்காக திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வடக்கு திமுக மாவட்ட செயலாளர் க. செல்வராஜ் எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்வில்
தெற்கு மாநகர திமுக செயலாளர் டி.கே.டி.மு. நாகராசன், வடக்கு மாநகர திமுக செயலாளர் மேயர் ந. தினேஷ்குமார், வடக்கு மாவட்ட துணை செயலாளர் வழக்கறிஞர் நந்தினி, பகுதி செயலாளர்கள் ஐயப்பன் , உசேன் மற்றும் மாவட்ட தொழில் தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சூர்யா , வார்டு செயலாளர் நந்தகோபால் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் க. ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment