அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.கே. விவசாய மணி (எ) ஜி. சுப்பிரமணி அவர்கள் கோவை மாவட்ட தேக்கம்பட்டி ஊராட்சி அமைப்பாளராக திருமதி கே.ராணி அவர்களையும், தேக்கம்பட்டி ஊராட்சி மகளிர் அணி துணை செயலாளராக திருமதி என். சுமதி அவர்களையும், தேக்கம்பட்டி ஊராட்சி நான்காவது வார்டு மகளிர் அணி தலைவியாக திருமதி எஸ்.சரஸ்வதி அவர்களையும், கோவை மாவட்ட தேக்கம்பட்டி ஊராட்சி இரண்டாவது வார்டு மகளிர் அணி தலைவியாக திருமதி எம். செல்வி அவர்களையும் நியமனம் செய்தார்.
அனைவருக்கும் பச்சைத் துண்டு அணிவித்து அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கம் பெண்கள் வாழ்கை முன்னேற்றம் அடைந்திட உறுதுணையாக இருக்கும் பெண்களுக்கு உண்டான உதவிகளை தொடர்ந்து செய்யும் எனவும் பாதுகாப்பு அரணாக என்றும் சங்கம் துணை நிற்கும் என்றும் கூறி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா. ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment