எம் சாண்ட், ஜல்லி யூனிட் ஆயிரம் ரூபாய் உயர்த்தியதை கண்டித்தும் முறைகேடாக செயல்படும் கிரஷர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானம்.
தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அடுத்த செங்கப்பள்ளி பகுதியில் நடைபெற்றது இதில் கட்டுமான பணிக்கு மிகவும் தேவையான மணல் குவாரிகள் இயங்காத சூழ்நிலையை பயன்படுத்தி செயற்கை மணல் தயாரிக்கும் எம் சாண்ட் கிரஷர்கள் கடுமையான விலை உயர்வை திட்டமிட்டு ஏற்படுத்தி வருவதாகவும் 3800 ரூபாய்க்கு விற்பனையான ஒரு யூனிட் எம்சாண்ட் தற்பொழுது 1200 ரூபாய் உயர்த்தப்பட்டு 5000 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் இதனால் வீடுகட்டும் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் உடனடியாக விலை உயர்வை திரும்ப பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தமிழக முழுவதும் 450 கிரஷர்களுக்கு எம்சாண்ட் உற்பத்தி செய்ய முறையாக அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கிரசர்கள் அனுமதி இன்றி செயல்பட்டு வருவதாகவும் இவற்றில் இருந்து தரமற்ற எம் சாண்ட் உற்பத்தி செய்யப்பட்டு முறைகேடாக விற்பனை செய்யப்படுவதாகவும் இந்த நிறுவனங்களை ஆய்வு செய்து முறைகேடாக செயல்படும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் தங்களது கோரிக்கைகளை தமிழக முதல்வர் தனி பிரிவிற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment