தமிழக கூடைப்பந்து அணிக்கு தாராபுரம் வீரர்கள் தேர்வு - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 30 November 2024

தமிழக கூடைப்பந்து அணிக்கு தாராபுரம் வீரர்கள் தேர்வு


தாராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து தற்போது கோவையில் உயர் கல்வி படித்து வருபவர்கள் ஹரிஷ், ஸ்ரீ சரண். இவர்கள் இருவரும் தாராபுரம் எங்மேன் பேஸ்கெட்பால் அகாடமியில் கூடைப்பந்து பயிற்சி பெற்றனர். தற்போது 16 வயதுக்குட்பட்ட பிரிவில் தமிழக கூடைப்பந்து அணிக்கு இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர், தமிழக அணி சார்பில் மேற்கு வங்காளத்தில் நடைபெறும் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டியில் பங்கேற்க உள்ளனர். இருவரையும் தாராபுரம் கூடைப்பந்து வீரர் பங்க் மகேஷ்குமார், கிரிக்கெட் கிளப் நிர்வாகிகள் உட்பட பலரும் பாராட்டி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad