திருப்பூரில் நெடுஞ்சாலை துறை பராமரிப்பில் உள்ள சாலை அவினாசி- திருப்பூர் சாலையில் 50 இடங்களுக்கு மேல் குன்றும் குழியுமாக உள்ளது
இதை சீரமைக்க வேண்டிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தூக்கத்தில் உள்ளனர் கண்டு கொள்வதே இல்லை. படத்தில் உள்ளது தினமும் லட்சக்கனக்கான வாகனங்கள் பயணிக்கும் மிக முக்கிய சாலையாகும் இதில் திருப்பூர் மாநகராட்சி அவிநாசி ரோடு எஸ்ஏபி தியேட்டர் எதிர்ப்புறம் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இதுபோன்று பெரும் குழிகள் உள்ளதால் ஆபத்து மற்றும் போக்குவரத்து இடையூறு அதிகமாக உள்ளது மற்றும் இருசக்கர வாகனங்கள் அந்த குழியில் ஏறி இறங்கும் பொழுது தடுமாறி விழுகின்றார்கள் இது உடனடியாக சரி செய்யப்பட வேண்டும் என்பது அங்கு பணியாற்றும் போக்குவரத்து காவலர் முதல் கொண்டு பொதுமக்கள் அனைவரும் புகார் செய்கின்றனர். மேலும் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான அனைத்து ரோடுகளும் இதே போல் தான் உள்ளது அனுப்பர்பாளையம் வேலம்பாளையம் பகுதிகளில் தார் ரோடுகளில் பாதி அளவு மண் உள்ளது இது மூன்று மாதங்களுக்கு மேலாக உள்ளது மண்ணை அள்ளுவதற்கு நவீன இயந்திரம் நெடுஞ்சாலை துறையிடம் உள்ளது அதை அப்புறப்படுத்த அதிகாரிகள் முன் வர வேண்டும் என்றும் இந்த அவினாசி ரோடு மாவட்ட ஆட்சியர் இல்லத்திற்கு அருகில் உள்ளது இந்த ரோடுகளில் தினமும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உடனடி நடவடிக்கை எடுக்குமா நெடுஞ்சாலை துறை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கடுமையான ஒரு உத்தரவை பிறப்பித்தால் மட்டுமே நெடுஞ்சாலை துறையினர் அக்கறையோடு வேலை செய்வார்கள் என்பது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா. ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment