திருப்பூரில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர்கள் உள்பட 300 பயனாளிகளுக்கு 9.45 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 20 December 2024

திருப்பூரில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர்கள் உள்பட 300 பயனாளிகளுக்கு 9.45 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


திருப்பூரில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர்கள் உள்பட 300 பயனாளிகளுக்கு 9.45 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

திருப்பூருக்கு மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்களிலும், திமுக நிகழ்ச்சிகளிலும். கலந்து கொண்டார்.

அதில் ஒரு பகுதியாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மூன்று சக்கர பெட்ரோல் வாகனங்கள் உள்ளிட்ட 300 பயனாளிகளுக்கு ரூ.9.45 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன்,  மாண்புமிகு மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் திருமதி. என். கயல்விழி செல்வராஜ், நாடாளுமன்ற உறுப்பினர்கள்  கே.சுப்பராயன் எம்பி, கே.இ.பிரகாஷ் எம்.பி, திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் எம் எல் ஏ, மாவட்ட ஆட்சி தலைவர் தா.கிறிஸ்துராஜ்,

இ.ஆ.ப., மாநகராட்சி மேயர்  ந.தினேஷ்குமார், துணை மேயர் ரா.பாலசுப்பிரமணியம்,  மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் உடன் கலந்து கொண்டனர்.


மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad