திருப்பூர் குமரன் சிலை முன்பு மத்திய அரசை கண்டித்து வெல்பேர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் ஏழு இஸ்லாமியர்களை சுட்டுக் கொன்றும், 500 வருடங்கள் பழமையான ஷாஜி ஜமா பள்ளிவாசலை இடிக்க முயற்சிக்கும் உத்திரபிரதேச அரசு மற்றும் மத்திய அரசு, உத்திர பிரதேச மாநில போலீசாரை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வெல்பேர் கட்சியின் மாவட்ட தலைவர் முகமது ரிஜ்வான் தலைமை தாங்கினார்.
மாநில துணை தலைவர் முகமது ஹவுஸ், மாவட்ட பொது செயலாளர் முகமது யாசின், மாவட்ட துணை தலைவர் முகமது அலி, மாநில செயலாளர் ஜெய்லானி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்தும் உத்தரப்பிரதேச அரசை கண்டித்தும் உத்தர பிரதேச மாநில போலீசாரை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா. ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment