கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில் தீண்டாமை சுவர் இடிந்து விழுந்தது 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 17 பேர் உயிரிழந்த சம்பவத்திற்காக நேற்று (டிசம்பர் 2) வீரவணக்கம் செலுத்துவதற்காக தமிழ் புலிகள் கட்சியின் மாநில தலைவர் நாகை திருவள்ளுவன் வருகை தந்த போது கோவை மாவட்டத்தை சேர்ந்த காவல்துறையினர் கைது செய்தனர்.
தமிழ் புலிகள் கட்சியின் மாநில தலைவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து தாராபுரம் அண்ணா சிலை அருகே தமிழ் புலிகள் கட்சியின் சார்பில் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட செயலாளர் காளிமுத்து தலைமையில் மாணவர் அணி செயலாளர் தில்லை, மண்டல துணைச்செயலாளர் ஒண்டிவீரன் ஆகியோர் முன்னிலையில் 20க்கும் மேற்பட்ட தமிழ் புலிகள் கட்சியினர் அண்ணாசிலை அருகே போலீசாரின் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் நகர செயலாளர் வீர வினோத், குண்டடம் ஒன்றிய செயலாளர் சந்தோஷ், இளைஞரணி செயலாளர் விக்னேஷ், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment