திருப்பூர் மாவட்டம் அவினாசி காசிகவுண்டன் புதூர் பகுதியில் உள்ள தாமரை கார்டன் குடியிருப்பு பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் இவரது மகன் ரமேஷ் (45) தொழிலதிபரான இவர் 4 சக்கர வாகனம் கன்சல்டிங் மற்றும் பைனான்ஸ் தொழிலும் செய்து வருகிறார் இவர் தினமும் காலை நடை பயிற்சி செல்வார் அதேபோல் இன்று அதிகாலை கோவை சேலம் ஆறு வழி சாலை மங்கலம் ரோடு பைபாஸ் அருகே உள்ள சர்வீஸ் சாலையில் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர்கள் ரமேஷ்சை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர் இதில் பல்வேறு இடங்களில் வெட்டுக்காயம் பட்ட ரமேஷ் அதே இடத்தில் மயங்கி விழுந்தார் இதை பார்த்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ரமேஷை அந்தப் பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள் சிலர் பார்த்து சிகிச்சைக்காக அவிநாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் செய்தக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே உயிரிழந்தார் இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அவிநாசி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலை நடந்த இடத்தில் தடயங்களை சேகரித்தனர். மேலும் கொலையாளிகள் யார் முன் விரோதம் காரணமா இல்லை தொழில் போட்டியில் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா என அவிநாசி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அவிநாசியில் இன்று காலை வாக்கிங் சென்றவர் வெட்டி கொலை செய்யப்பட்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment