அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களுக்கு நாராயணசாமி நாயுடு நினைவு தின விழா, பிரமாண்ட பேரணி அழைப்பிதழை விவசாய சங்க தலைவர் ஜி.கே. விவசாய மணி வழங்கினார்.
வருகிற 2024 டிசம்பர் மாதம் 21ல் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு அய்யா அவர்களின் 40 ம் ஆண்டு நினைவு தின நிகழ்வுக்காக திருப்பூரில் உள்ள பிரிட்ஜ்வே காலனி தலைமை அலுவலகத்தில் இருந்து கோவை மாவட்டம் , வையம்பாளையத்தில் உள்ள நாயுடு அய்யா அவர்களின் நினைவிடத்திற்கு ஆயிரக்கணக்கானோர் வாகனங்களில் பேரணியாக சென்று மலர் மரியாதை செய்ய சங்கத்தின் சார்பில் விவசாய பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் அமைச்சர் பெருமக்கள் அஞ்சலி செலுத்த உடன் வந்து விழாவை சிறப்பிக்க வேண்டிய அழைப்பிதழை தமிழ்நாடு மின்சார, கலால் மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களிடம் சங்கத்தின் நிறுவன தலைவர் ஜி.கே.விவசாயமணி (எ) ஜி. சுப்பிரமணி அவர்கள் வழங்கினார். உடன் சங்க நிர்வாகிகள் சென்னியப்பன் , பழனிச்சாமி, குருசாமி , நாகேந்திரன், மணிகண்டன்,சுதாகர், தினேஷ்குமார், மகேந்திரன், காளிமுத்து, கிருஷ்ணகுமார் மற்றும் வீரலட்சுமி உள்ளிட்டோர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா. ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment