மாற்று திறனாளிகள் பயன்பாட்டுக்கு சக்கர நாற்காலிகள் சமூக சேவகி இந்திரா சுந்தரம் வழங்கினார் .
திருப்பூர் இந்திரா சுந்தரம் அறக்கட்டளையின் நிறுவனர் சமூக சேவகி இந்திராசுந்தரம் அவர்களின் அன்னையின் பிறந்தநாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை இந்திரா சுந்தரம் தொண்டு நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டு வருகின்றது. அதில் ஒரு பகுதியாக சமூக சேவகி இந்திரா சுந்தரம் அவர்கள் வழிகாட்டுதலின் பேரில்
திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வருகை தரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு பயன்படும் விதமாக ரூபாய் 30,000 மதிப்புள்ள 4 வீல்சேர்கள் இந்திராசுந்தரம் தொண்டு நிறுவனத்தின் சார்பாக திருப்பூர் மாநகர காவல் துணை ஆணையர் எம். ராசராசன் அவர்களிடம் தொண்டு நிறுவனத்தின் நிர்வாகி ராஜா முகமது தலைமையில் வழங்கினார்கள்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் கா. ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment