அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு அய்யா அவர்களின் 40ம் ஆண்டு நினைவு தினம்
தமிழகத்தில் விவசாயிகள் சங்கங்கள் உருவாக்கிட அடித்தளம் அமைத்தவரும், சி.நாராயணசாமி நாயுடு அய்யா அவர்கள்,1957ம் ஆண்டிலிருந்தே தன்னை விவசாய போராட்ட களங்களில் ஈடுபடுத்தி கொண்டவர், விவசாயத்திற்கான இலவச மின்சாரம் முதல், வேளாண் பொருட்களுக்கான அடிப்படை விலை நிர்ணயம் வரை, விவசாயிகளின் உரிமகளை பெற்று கொடுத்ததில் அவரின் பங்கு அளப்பரியது. அய்யா சி.நாராயணசாமி நாயுடு அவர்களை பெருமையுடன் நினைவு கூறும் வகையில் டிச ,21ந்தேதி அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் அவரின் 40 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு திருப்பூர் பிரிட்ஜ்வே காலனியில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அலுவலக வளாகத்தில் மலர்களால் அலங்கரித்து வைத்திருந்த சி.நாராயணசாமி அய்யா அவர்களின் திருவுருவ படத்திற்கு விவசாயி மற்றும் தொழிலாளர் உரிமை போராளி நிறுவன தலைவர் ஜி.கே.விவசாயமணி (எ) ஜி.சுப்பிரமணி அவர்கள் தலைமையில், மூத்த நிர்வாகிகள் தலைமை நிலைய ஆலோசகர் .எஸ்.சென்னியப்பன் பழனிச்சாமி மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் சிறப்பு பூஜைகள் செய்தும்,மாலை அணிவித்தும், மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் மாநில, மாவட்ட, மாநகர ,ஒன்றிய, பேரூர் கழகம், ஊராட்சி நிர்வாகிகள்,பொறுப்பாளர்கள், வார்டு, கிளை பிரதிநிதிகள் கலந்து கொண்டு மலர் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் நாராயணசாமி அய்யா மணி மண்டபம் அமைந்துள்ள கோவை மாவட்டம்,அன்னூர் அருகே உள்ள வையம்பாளையத்திற்கு நிறுவனத்தலைவர் ஜி.கே.விவசாய மணி (எ) ஜி.சுப்பிரமணி அவர்கள் தலைமையில், 400 க்கும் மேற்பட்ட வேன்கள், கார்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட இருச்சக்கர வாகனங்களில் சுமார் 4000 க்கும் மேற்பட்ட பச்சை துண்டு பாட்டாளிகள் அணிவகுக்க, ராணுவ கட்டுப்பாட்டுடன், போக்குவரத்திற்கும்,பொதுமக்களுக்கும் இடையூறு இல்லாமல் வாகன பேரணி புறப்பட்டு புஷ்பா ரவுண்டாணா, கல்லூரி சாலை, வஞ்சிப்பாளையம், அவிநாசி, கருவலூர், அன்னூர், கோவில்பாளையம் வழியாக சென்று வையம்பாளையம் சென்றடைந்தனர். கோவை கணேசபுரத்தில் கோவை மாவட்ட தலைவர் தீனதயாளன் அவர்கள் தலைமையில் சிறப்பு வரவேற்பு அளித்தார். அங்கு அன்னூர் ஒன்றிய செயலாளர் குருசாமி அவர்களின் ஏற்பாட்டில் ரேக்ளா (மாட்டு) வண்டி கொண்டு வரப்பட்டு, சீரிப்பாயும் இரட்டை காளைகளை பூட்டி அதில் சங்க நிறுவனத்தலைவர் ஜி.கே.விவசாய மணி (எ) ஜி.சுப்பிரமணி அவர்களை அமர வைத்து விவசாய பெருமக்களின் பழமை மாறாமல் நாராயணசாமி நாயுடு ஐயா அவர்களின் மணி மண்டபத்திற்கு ஊர்வலமாக சென்று அங்கு அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். நிகழ்வில் கலந்து கொண்டோருக்கு காலை,மதியம்,இரவு உணவு வழங்கப்பட்டது. அஞ்சலி நிகழ்வினை சங்க தலைவர் மற்றும் நிர்வாகிகள் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் கா ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment