அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் திருப்பூர் பாண்டியன் நகர் பகுதிக்கு உட்பட்ட, 5வது வார்டில் , அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில், வசிக்கும் மக்களுக்கும், வேலைக்கு செல்பவர்களுக்கும் மற்றும் பள்ளிக்கு செல்லும் மாணவ,மாணவிகளுக்கு காலதாமதம் இல்லாமல் முறையான நேரத்தில் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து வசதி செய்து தர திருப்பூர் மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார் அவர்களிடம் கோரிக்கை வைத்தனர் இந்த கோரிக்கையை ஏற்று திருக்குமரன் நகர், பாரதிநகர் அடுக்குமாடி குடியிருப்பு,ஜே ஜே நகர், சமத்துவபுரம் பகுதி,அம்மன் நகர், பாண்டியன் நகர்,முத்தமிழறிஞர் டாக்டர் . கலைஞர் மு.கருணாநிதி பேருந்து நிலையம் வரை, மினிபேருந்தை மக்களுடன் சேர்த்து மேயர் ந.தினேஷ்குமார் துவக்கி வைத்தார் . இந்த நிகழ்வில் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் மாவட்ட செய்தியாளர்
அ.காஜாமைதீன்
மற்றும் கா. ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment