திருப்பூர் மாநகர காவல் ஆணையராக திருமதி லட்சுமி இ.கா.ப., அவர்கள் சில மாதங்களுக்கு முன்பு பொறுப்பேற்றார் இதன் பின் திருப்பூர் மாநகரமே தலைகீழாக மாறிவிட்டது என்று கூறலாம் பல இடங்களில் சோதனை சாவடிகள் மூடிய நிலையில் அவைகள் புத்துயிர் பெற்றும், புதிதாக அமைக்கப்பட்டும் மேலும் ஹான்ஸ் விற்பனையை தடை செய்தும் அபராதம் விதித்தும், உரிமம் இல்லாத டாஸ்மாக் அதிரடியாக அடைத்தும் டாஸ்மார்க் கடைகளை அரசு குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் திறந்தும் மூடவும் குடியரசு தினம் உள்ளிட்ட மதுபானம் விற்க தடை செய்யப்பட்ட நாட்களில் கள்ளச் சந்தையில் மது விற்பதை தடுக்கும் வகையில் தீவிர நடவடிக்கை எடுத்தும் சிறப்பாக பணியாற்றும் அதிகாரிகள் காவலர்கள் உள்ளிட்டோருக்கு சிறப்பு பரிசு சான்றிதழ்களை நேரில் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு போற்றுதலுக்குரிய செயல்களை செய்து வருகிறார். இந்த செயல்பாடுகள் பொதுமக்கள் மற்றும் பெண்கள் சமூக ஆர்வலர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அந்த வகையில் திருப்பூர் மாநகரில் சிறப்பாக பணியாற்றிவரும் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களை பாராட்டும் விதமாக காவல் ஆணையர் திருமதி சு.லட்சுமி இ.கா.ப அவர்கள் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நேரில் வரவழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் கா. ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment