திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலுள்ள இடங்களில் தற்போது தரமற்ற இட்லி தோசை மாவு விற்பனை செய்யப்படுகின்றது இது தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு சமூக ஆர்வலராகிய ஈ.பி.அ.சரவணன் புகார் அளித்த நிலையில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் இன்று திருப்பூரிலுள்ள இட்லி தோசை மாவு தயாரிக்கும் இடங்களில் நேரிடையாக சோதனை நடத்தி வருகின்றனர்.
புகாரின் பேரில் உடனடியாக உரிய தீர்வுகண்ட மாவட்ட ஆட்சியருக்கும் மாவட்ட உணவு பாதுகாப்பு துறைக்கும் மனமார்ந்த நன்றி.
இந்த இட்லி தோசை மாவுகள் உயிருக்கு கேடு விளைவிக்கும் வகையில் இருப்பதால் தொடர்ச்சியாக திருப்பூர் மாவட்டத்திலுள்ள அனைத்து இட்லி தோசை மாவு அரைக்கும் இடங்களில் போர்க்கால அடிப்படையில் தொடர்ச்சியாக கள ஆய்வுகள் செய்ய வேண்டுமென்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
No comments:
Post a Comment