திருப்பூர் மாநகராட்சி ஆணையாளரிடம் புதிய காய்கறி மார்க்கெட் ஏலத்தை பாரபட்சமின்றி முறையாக நடத்த கோரி எஸ்டிபிஐ கட்சியினர் மனு - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 1 January 2025

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளரிடம் புதிய காய்கறி மார்க்கெட் ஏலத்தை பாரபட்சமின்றி முறையாக நடத்த கோரி எஸ்டிபிஐ கட்சியினர் மனு


திருப்பூர் மாநகராட்சி ஆணையாளரிடம் புதிய காய்கறி மார்க்கெட் ஏலத்தை பாரபட்சமின்றி முறையாக நடத்த கோரி எஸ்டிபிஐ கட்சியினர் மனு கொடுத்தனர். திருப்பூர் வடக்கு மாவட்டம் எஸ் டி பி ஐ கட்சி சார்பாக  திருப்பூர் மாநகராட்சி ஆணையர் அவர்களை சந்தித்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ்  காய்கறி மார்க்கெட் ஏலத்தை பொது ஏலம் விட வேண்டும் என்று  மனு வழங்கியது....

அந்த மனுவில்  மாநகராட்சி ஆணையர்  அவர்களுக்கு திருப்பூர் பழைய பஸ் நிலையம் எதிரே பழைய காய்கறி மார்க்கெட் ஸ்மார்ட்  சிட்டி திட்டத்தின் கீழ் கட்டுமானப் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது தற்சமயம் கடந்த சில தினங்களாக செய்தித்தாள்கள் மூலமாக வரும் செய்திகள் மேற்கண்ட காய்கறி கடைகளை ஏற்கனவே வியாபாரம் செய்து வந்த வியாபாரிகளுக்கு அவர்கள் கேட்கும் கடையை முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கி கொடுக்க வேண்டும்

 என வேண்டுகோள் விடுப்பதாக அறிகிறோம்

 அவ்வாறு ஒதுக்கீடு செய்தால் 

 அரசிற்கு பெரும் வருவாய்  இழப்பு ஏற்படும் என்றும் ஆகவே அவ்வாறு செய்யாமல் பழைய பேருந்து நிலைய கடைகளை எப்படி பொது ஏலம் விட்டது போல்

புதிய காய்கறி மார்க்கெட் வளகத்தில் உள்ள அனைத்து கடைகளையும் பொது ஏலம் விட்டு அரசிற்கு வருவாய் இழப்பு ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 

இந்த மனுவின் மூலம் கேட்டுக்கொள்கிறோம்.


மேலும் ஒரு குறிப்பிட்ட சங்கங்களுக்கோ, ஆளும் கட்சியினர் என யாருக்கும் எந்த ஒரு தனிப்பட்ட நபருக்கும் கடையில் ஒதுக்கீடு செய்யப்படக்கூடாது, 

என்று தங்களை அன்போடு கேட்டு கொள்கிறோம். 

அப்படி மீறி ஒதுக்கீடு செய்யும் நிலை வந்தால்  பொதுமக்கள் நலன் கருதி எஸ்டிபிஐ கட்சி நீதிமன்றத்தில் முறையிட்டு  அனைத்து மக்களும் பயன் பெறும் வகையிலும் மற்றும் மாநகராட்சி வருவாய்க்கும் நன்மை பயக்கும்  நடவடிக்கைகளை

எஸ்டிபிஐ கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்டம் முன்னெடுக்கும் என்று இந்த மனுவின் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எஸ் டி பி ஐ கட்சி திருப்பூர் வடக்கு மாவட்ட

 மாவட்ட தலைவர் வீ கேன் பாபு   அவர்கள் தலைமையில் 

துணை தலைவர் அப்துல் சத்தார் ,   வர்த்தக அணி மாவட்ட தலைவர் அக்பர் அலி , 

 தொழிற்சங்க மாவட்ட தலைவர் சித்திக் , 

 மாவட்ட செயலாளர் அன்வர் ,

 மாவட்ட பொருளாளர் ஜாபர் சாதிக் ,

 மாவட்ட செயற்குழு உறுப்பினர் இதயத்துல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும்  கா. ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad