திருப்பூரில் விஜய் தேர்தல் பிரச்சாரம் 20 பேர் மயக்கம் - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 15 April 2026

திருப்பூரில் விஜய் தேர்தல் பிரச்சாரம் 20 பேர் மயக்கம்


 திருப்பூர்  பெருமாநல்லூரில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள  கோவையில் இருந்து பெருமாநல்லூருக்கு அவிநாசி ரோட்டில் பரப்புரை வாகனத்தில் வந்தார் அவிநாசி ரோட்டில் கடும் வெயிலில் வழிநெடுக தொண்டர்கள் காத்திருந்தனர் விஜய் வந்த பிரச்சார வேனை  பல இடங்களில் தடுத்து நிறுத்தி ஆரவாரம் செய்தனர் இதனால் பெருமாநல்லூருக்கு விஜய் வருவதற்கு காலதாமதம் ஆயிற்று கடுமையான வெயிலில் காரணமாக  சுமார் 20 பேர் மயக்கம் மயங்கி விழுந்தனர் அவர்களுக்கு ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் விஜய் பெருமாநல்லூரில் வேனில்  அறிக்கைகளை மட்டுமே பேசினார் மேலும் தடுப்புகளை தாண்டி விஜய் ரசிகர்கள் ஆண்கள் பெண்கள்  வேணுக்கு அருகில் ஓடி வந்தனர் இதனால் காவல்துறையினர் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை பெருமாநல்லூருக்கு மிகவும் தாமதமாக வந்து சேர்ந்ததால் விஜய் திட்டமிட்டபடி ரோடு ஷோ நடத்த முடியவில்லை இந்த ரோடு ஷோ பெருமாநல்லூரில் இருந்து ஆறு கிலோமீட்டர் அவிநாசி வரை நடத்த காவல்துறை அனுமதி கொடுத்திருந்தது 

 இந்த ரோடு ஷோ ரத்து செய்ததால் த வெ க தலைவர் விஜய் அவர்கள் பரப்புரையை முடித்துக் கொண்டு கோவை சென்று சென்னை பயணத்திற்கு புறப்பட்டு சென்றார்

No comments:

Post a Comment

Post Top Ad