அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று( 09.04.2026) 48-ஆம் ஆண்டு வேடசந்தூர் தியாகிகள் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நிறுவனத் தலைவர் G.K.விவசாய மணி (எ) G.சுப்பிரமணியம் அவர்களின் தலைமையில் சங்கத்தின் நிர்வாகிகள் கலந்துகொண்டு திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆத்துமேடு பகுதியில் அமைந்துள்ள நினைவிடத்தில் மதியம் 1.30 மணியளவில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது . முன்னதாக திருப்பூர் பிரிட்ஜ்வே காலனி தலைமை அலுவலகத்திலிருந்து காலை 8.30 மணியளவில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொள்ள புறப்பட்டனர்.
விவசாயிகளின்
உரிமைகளுக்காகத் தமிழகத்தில் நடந்த மிகப் பெரிய போராட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. 1978-ஆம் ஆண்டு மின்சாரக் கட்டணக் குறைப்பு மற்றும் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யக் கோரி தமிழகம் முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். வேடசந்தூரில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தின் போது காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் விவசாயிகள் வே. நாச்சிமுத்து கவுண்டர், வா. சுப்பிரமணி, சின்னச்சாமி கவுண்டர், இரா.கருப்பசாமி ப. மாணிக்கம், ப. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உயிரிழந்தனர். இவர்களின் நினைவாக திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆத்துமேடு பகுதியில் இந்த விவசாயிகள் நினைவுத் தூண் அமைக்கப்பட்டுள்ளது. நம் உரிமைக்காகப் போராடிய விவசாய தியாகிகளின் உணர்வுகளைப் போற்றும் விதமாக
அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்க தலைவர் ஜிகே விவசாய மணி (எ) ஜி சுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் ஒவ்வொரு ஆண்டும் இந்த நினைவு தினத்தை அனுசரித்து வருகின்றனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:
Post a Comment