தாராபுரம் அருகே வாகன சோதனையில் ₹90 ஆயிரம் பறிமுதல். - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 2 April 2026

தாராபுரம் அருகே வாகன சோதனையில் ₹90 ஆயிரம் பறிமுதல்.


திருப்பூர் – ஏப்ரல் 02:


தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்–2026 முன்னிட்டு, திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே பறக்கும் படை அதிகாரிகள் மேற்கொண்ட வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ₹90,000 ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது.


தாராபுரம் உப்பாறு அணை செல்லும் மடத்துப்பாளையம் பகுதியில் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திம்மநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த யுவராஜ் (37) என்பவர் பயணம் செய்த வாகனம் நிறுத்தி சோதனை செய்யப்பட்டது. சோதனையின் போது, அவர் எடுத்துச் சென்ற ₹90,000 பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், பறக்கும் படை அதிகாரிகள் அந்த தொகையை பறிமுதல் செய்து தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.


பின்னர் விசாரணையில், யுவராஜ் தனது கோழிப்பண்ணைக்கு தேவையான தீவனங்களை வாங்குவதற்காக அந்த பணத்தை எடுத்துச் சென்றதாக தெரியவந்துள்ளது. தேர்தல் ஒழுங்குமுறை விதிகளை கடைப்பிடிக்க மாவட்டம் முழுவதும் வாகன சோதனைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

No comments:

Post a Comment

Post Top Ad