தவெக விஜய் முதல்வர் பதவி ஏற்க அனுமதிக்காத கவர்னரை கண்டித்து APADMK பொதுச்செயலாளர் வி எஸ் கே கண்டன அறிக்கை - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 8 May 2026

தவெக விஜய் முதல்வர் பதவி ஏற்க அனுமதிக்காத கவர்னரை கண்டித்து APADMK பொதுச்செயலாளர் வி எஸ் கே கண்டன அறிக்கை


 அண்ணா புரட்சித் தலைவர் அம்மா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் பொதுச் செயலாளர் வி செந்தில் குமார்(VSK) அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் 

அண்ணா புரட்சித் தலைவர் அம்மா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சார்பாக நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலில் 234 தொகுதிகளுக்கும்  தேர்தல் ஆணையத்தில் ஒரே சின்னம் பலாப்பழம் சின்னத்தை பெற்று நாங்கள் தனித்து களம் கொண்டோம் அந்த பலாப்பழம் சின்னத்தில் வாக்களித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொண்டு இன்றைய அரசியல் சூழ்நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் திரு விஜய் அவர்கள் தனித்து களம் கண்டு தனிப்பட்ட முறையில் இன்றைய சூழ்நிலையில் தனித்து 108 சீட்டுகளும் காங்கிரஸ்ஆதரவு சீட்டுகளும் இணைந்து 113 சீட்டுகள் அவர்களிடத்தில் உள்ளது கவர்னர் பின்னால் யார் இருக்கின்றார்கள் என்பது உங்களுக்கு அனைவருக்கும் தெரியும் கவர்னர் என்ன செய்ய வேண்டும் தனியாக நின்று நூத்தி எட்டு சீட்டுகளும் காங்கிரஸ் சீட்டு ஐந்து சேர்ந்து 113 சீட்டுகள் வைத்துள்ள  விஜய் அவர்களை அழைத்து முதல்வராக பதவி பிரமாணம் செய்ய வேண்டும் அதை விட்டுட்டு 118 நீங்கள் ஆதரவு காண்பிக்க வேண்டும் என்பது கவர்னர் மாளிகையில் அல்ல அது காண்பிக்க வேண்டிய இடம் சட்டசபையில் அதற்கு முன்னால் திரு விஜய் அவர்களை முதல்வராக பதவி ஏற்பு விழா நடத்திவிட்டு அதன் பின்பு சட்ட சபையில் அவர் மெஜாரிட்டியை காண்பிக்க சொல்ல வேண்டும் அதை விட்டுவிட்டு கவர்னர் அவர்கள் கவர்னராக செயல்பட வேண்டும் விஜய் அவர்களுக்கு முதல்வர் பதவியை  கொடுக்காமல் செய்வது சரியல்ல எந்த ஒரு கழகத்திற்கும் ஆதரவாக பேசவில்லை மக்களால் வாக்களித்து வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வர் பதவியை ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் அதன் பின்பு சட்ட சபைக்கு சென்று மெஜாரிட்டியை காண்பிக்க சொல்ல வேண்டும் அதுதான் சரியானது அதை விட்டுவிட்டு ஏதாவது ஒன்று காரணத்தை சொல்லி யார் யாரோ என்னமோ சொல்லுகின்றார்கள்  என்பதற்காக அலைய வைக்கக்கூடாது மக்களால் தேர்ந்தெடுக்க பட்ட வரை அலைய விடக்கூடாது கஷ்டப்பட விடக்கூடாது என்பதற்காக நான் I'll வந்திருக்கின்றேன் மீண்டும் சொல்லுகின்றேன் த வெ க தலைவர் விஜய் அவர்களுக்கு முதல்வர் பதவியை  ஏற்க வைக்க வேண்டும் இல்லையென்றால் நியாயத்திற்காக அண்ணா புரட்சித் தலைவர் அம்மா திராவிட முன்னேற்றக் கழகம்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் ஒரு நியாயத்தை கேட்பதற்காக எந்த இடம் பொருளை பார்க்காது எல்லா இடங்களி லும் நான் பேச இருக்கின்றேன் நாங்கள் எங்களுடைய வெளிப்படைத்தன்மையான உண்மையை நாங்கள் சொல்லித்தான் தீருவோம் ஆளுநருக்கு கண்டனத்தை தெரிவிக்கின்றேன் அவர்களுக்கும் அவருக்கு பின்னால் செயல்படும் கூடியவர்களுக்கும் உடனடியாக திரு விஜய் அவர்களை வரவழைத்து அவருக்கு முதல்வர் பதவியை பதவி ஏற்க வைக்க வேண்டும் என்பதை கோரிக்கை கொள்கின்றேன் இவ்வாறு அண்ணா புரட்சித் தலைவர் அம்மா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் பொதுச் செயலாளர் வி செந்தில் குமார் (VSK) அவர்கள் தெரிவித்துள்ளார்

 செய்தியாளர்

 அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad