திருப்பூர் மொத்தம் எட்டு சட்டமன்ற தொகுதிகள் திருப்பூர் வடக்கு திருப்பூர் தெற்கு உடுமலைப்பேட்டை காங்கேயம் பல்லடம் அவிநாசி( தனி தொகுதி) மடத்துக்குளம் தாராபுரம் (தனி தொகுதி )இதில் தமிழக வெற்றி கழகம் நான்கு தொகுதிகளை கைப்பற்றியுள்ளது திமுக கூட்டணி இரண்டு தொகுதிகளை கைப்பற்றியுள்ளது அதிமுக கூட்டணி இரண்டு தொகுதிகளை கைப்பற்றியுள்ளது நாம் தமிழர் கட்சி ஒரு தொகுதிகளையும் கைப்பற்றவில்லை மேலும் திருப்பூர் வடக்கு பகுதியில் தமிழகம் வெற்றிக் கழகம் சார்பில் சத்தியபாமா அதிமுக சார்பில் எம் எஸ் எம் ஆனந்தன் இ கம்யூனிஸ்ட் சார்பில் ரவி என்கின்ற சுப்பிரமணியன் நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா ஆகியோர் போட்டியிட்டனர் இந்த வடக்கு பகுதியில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் சத்தியபாமா தக்கவைத்து கொண்டார் இந்த தொகுதியில் 2,63,457 வாக்குகள் பதிவாகி உள்ளன இதில் ஒரு லட்சத்து முப்பத்தி ஒரு ஆயிரத்து நானூற்றி
ஒன்று (1,31,401) வாக்குகள் வாங்கி வெற்றி பெற்றார் அதேபோல் திருப்பூர் தெற்கு பகுதியில் பாலமுருகன் தமிழக வெற்றிக் கழகம் தினேஷ்குமார் திமுக தங்கராஜ் பாரதிய ஜனதா தினேஷ் நாம் தமிழர் கட்சி ஆகியோர் போட்டியிட்டனர் இதில் மொத்தம் பதிவான வாக்குகள் ஒரு லட்சத்து எழுபத்தி ஒன்பது ஆயிரத்து எட்டு
நூற்றுபத்தினாலு ( 1,79,814 )வாக்குகள் ஆகும் இதில் பாலமுருகன் எழுபத்தி முவாயிரத்து எழுநூற்று தொன்னூற்று முன்று
(73,793) வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார் உடுமலைப்பேட்டையில் மு ஜெயக்குமார் திமுக வேட்பாளராகவும் உடுமலை ராதாகிருஷ்ணன் அதிமுக வேட்பாளராகவும் சங்கர் தமிழக வெற்றிக் கழக வேட்பாளராகவும் ராம்குமார் நாம் தமிழர் கட்சி வேட்பாளராகவும் போட்டியிட்டனர் இதில் பதிவான ஓட்டு 2, 03,575 வாக்குகள் பதிவானது இந்த வாக்குகளில் திமுக வேட்பாளர் மு ஜெயக்குமார் 68,549 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார் காங்கேயம் தொகுதி அதிமுக சார்பில் நடராஜ் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மணிக்கவுண்டர் திமுக சார்பில் மு. பெ. சாமிநாதன் நாம் தமிழர் கட்சி சார்பில் கார்மேகம் ஆகியோர் போட்டியிட்டனர் பதிவான மொத்த வாக்குகள் இரண்டு லட்சத்து
முவாயிரத்து ஐநூற்று முப்பத்தி நான்கு (2,03,534 )வாக்குகள் பதிவானது இதில் அதிமுகவை சேர்ந்த நடராஜ் எழுப்பத்தி ஒரு ஆயிரத்து நூற்று
இருபத்தி இரண்டு (71,122 ) வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார் பல்லடம் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றிக்கழகம் சார்பாக ராம்குமார் அதிமுக சார்பாக கே பி பரமசிவம் திமுக சார்பாக க. செல்வராஜ் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழினியன் ஆகியோர் போட்டியிட்டனர் இங்கு பதிவான வாக்குகள் மூன்று லட்சத்து ஆயிரத்து பதிநான்கு (3,01,014 ) இதில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் ராம்குமார் ஒரு லட்சத்து இருபத்தி ஒரு ஆயிரத்து இருநூற்று தொன்னூற்று ஏழு (1,21,297) வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார் அவிநாசி தனித் தொகுதி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கமலி பாரதிய ஜனதா சார்பில் வேல்முருகன் திமுக சார்பில் கோகிலா மணி நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா ஆகியோர் போட்டியிட்டனர் இங்கு பதிவான வாக்குகள் இரண்டு லட்சத்து முப்பத்தி ஓராயிரத்து ஆறுநூறு வாக்குகள் ஆகும் இதில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் கமலி என்பத்து நாலாயிரத்து இருநூற்றி ஒன்பது (84,209)வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார் மடத்துக்குளம் தொகுதி திமுக சார்பில் ஜெயராமகிருஷ்ணன் அதிமுக கூட்டணி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் சண்முகவேலு தமிழக வெற்றி கழகம் சார்பில் திருமலை நாம் தமிழர் கட்சி சார்பில் ராதாமணி ஆகியோர் போட்டியிட்டனர் இங்கு பதிவான வாக்குகள் ஒரு லட்சத்து என்பத்து
எட்டாயிரத்து இருநூற்றி நாற்பத்து ஒன்பது(1,88,249) வாக்குகள் ஆகும் இதில் திமுகவைச் சேர்ந்த ஜெயராமகிருஷ்ணன் எழுபது ஆயிரத்து நாநூற்றி ஐம்பத்தி எட்டு (70,458) வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார் தாராபுரம் தனி தொகுதி அதிமுக சார்பில் சத்தியபாமா திமுக சார்பில் இந்திராணி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கௌரி சித்ரா நாம் தமிழர் கட்சி சார்பில் திவ்யா ஆகியோர் போட்டியிட்டனர் இங்கு பதிவான வாக்குகள் ஒரு லட்சத்து தொன்னூற்றி
ஒன்பதாயிரத்து
தொலாயிரத்து
நாற்பத்து நான்கு (1,99,944 )வாக்குகள் ஆகும் இதில் அதிமுகவை சேர்ந்த சத்தியபாமா என்பத்தி ஒரு ஆயிரத்து நூறு (81,100) வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:
Post a Comment