நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணியில் அங்கம் வகித்த திமுக வேட்பாளர் அமைச்சர்
மு.பெ.சாமிநாதன் அவர்கள் காங்கேயம் தொகுதியில் போட்டியிட்டடார் அவர் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து கூறியதாவது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கேயம் தொகுதியில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்த பொதுமக்களுக்கும், தேர்தல் பணியாற்றிய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நிர்வாகிகளுக்கும் மனமார்ந்த நன்றி.
மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக எடுத்த பெரும் முயற்சிகளுக்குப் பிறகு வந்த இந்த முடிவு மனதை வலிக்கச் செய்கிறது. இருந்தாலும், ஜனநாயகத்தில் மக்கள் தீர்ப்பே உயர்ந்தது என்பதை நாங்கள் மதிக்கிறோம்.
இந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
திராவிட முன்னேற்றக் கழகம் கடந்த காலங்களில் — 1976, 1991, 2001, 2011, 2016 போன்ற சவாலான காலங்களுக்குப் பிறகும் — இன்னும் வலிமையாக மீண்டு வந்தது.
இந்த அனுபவம் எங்களை மேலும் உறுதிப்படுத்துகிறது.
மக்களின் நலனுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம்.
மீண்டும் வலிமையாக திரும்புவோம். இவ்வாறு தனது அறிக்கையில் பதிவு செய்துள்ளார்
மாவட்ட செய்தியாளர் காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:
Post a Comment