தாராபுரத்தில் பக்ரீத் பண்டிகை: இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையில் பங்கேற்பு. - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 28 May 2026

தாராபுரத்தில் பக்ரீத் பண்டிகை: இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையில் பங்கேற்பு.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இன்று பல்வேறு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. அதிகாலை முதலே இஸ்லாமியர்கள் பள்ளிவாசல்களில் திரளாகக் கூடினர்.

பக்ரீத் திருநாளை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு, உலக அமைதி மற்றும் சகோதரத்துவம் நிலைக்க வேண்டி பிரார்த்தனை செய்தனர். மேலும், தியாகத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் உரைகளும் இடம்பெற்றன.

தொழுகை நிறைவடைந்த பின்னர், இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி பக்ரீத் பண்டிகை நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் பரிமாறிக் கொண்டனர். தொடர்ந்து ஏழை, எளிய மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டதுடன், பல இடங்களில் இனிப்புகள் மற்றும் உணவுகளும் பகிர்ந்து கொள்ளப்பட்டன.

தாராபுரம் முழுவதும் பக்ரீத் பண்டிகை ஆன்மிக உற்சாகத்துடன் மற்றும் மகிழ்ச்சியான சூழலில் கொண்டாடப்பட்டது.

திருப்பூர் மாவட்ட செய்தியாளர் ஜாபர்சாதிக்.

No comments:

Post a Comment

Post Top Ad