தமிழரை தாக்கிய செயலை கண்டித்து நாம் தமிழர் கட்சி மற்றும் தொழிற்சங்க பேரவை ஆர்ப்பாட்டம் - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 14 May 2026

தமிழரை தாக்கிய செயலை கண்டித்து நாம் தமிழர் கட்சி மற்றும் தொழிற்சங்க பேரவை ஆர்ப்பாட்டம்


திருப்பூர் செட்டிபாளையம் பகுதியை அடுத்த இந்திரா நகர் பகுதியில் வட மாநில தொழிலாளர்கள் சிலர் சாலையில் சத்தமாக பேசிக் கொண்டிருந்த நிலையில் அங்கு நண்பருடன் பேசிக் கொண்டிருந்த திமுக  வேலம்பாளையம் பகுதி நெசவாளர் அணி அமைப்பாளர் ஜெகதீஷ் ஒண்ணாவது வார்டு செயற்குழு உறுப்பினர் ராமமூர்த்தி ஆகியோர் வடமாநில தொழிலாளர்களை அமைதியாக செல்லும்படி கேட்டுக் கொண்டதாகவும் இதனால் வடமாநில தொழிலாளர்களுக்கு ஜெகதீஷ் உள்ளிட்டோருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது இதை அடுத்து வட மாநில தொழிலாளர்கள் சென்று மேற்கொண்டு சக வடமாநில தொழிலாளர்களை அழைத்துக் கொண்டு வந்து ரகலையில் ஈடுபட்டனர் ஜெகதீஷ் ராமமூர்த்தி ஆகியோரை சரமாரியாக தாக்கத் தொடங்கினர் இந்த மோதலில் ஜெகதீசுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது காதில் அடிபட்டு காயம் ஏற்பட்டது இதை அடுத்து  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் திருப்பூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் மற்றும் நாம் தமிழர் தொழிற்சங்க பேரவை சார்பில் மாநில இணைச் செயலாளர் கொ.மு. சுரேஷ்பாபு தலைமையில் ஆஸ்பத்திரியில் இருந்த ஜெகதீஷை சந்தித்து விவரங்களை கேட்டறிந்தனர் இது சம்பந்தமாக காவல்துறைக்கு சென்று என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை கேட்டு அறிந்து விட்டு வட மாநில தொழிலாளர்களை கண்டித்து போராட்டத்திற்கு அனுமதி வாங்கி வந்தனர் இந்த நிலையில் திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில் ஒருங்கிணைந்த திருப்பூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி மற்றும் நாம் தமிழர் தொழிற்சங்க பேரவை சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழரை தாக்கிய வட மாநிலத்தவர்களை அவர்களின் செயலை கண்டித்தும் உள் அனுமதி சீட்டை நடைமுறைப்படுத்த கோரியும் உள்பட்ட பல்வேறு கோரிக்கைகளை 

கோஷமாக எழுப்பினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியை நிர்வாகிகள் மற்றும் நாம் தமிழர் தொழிற்சங்க பேரவை நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர் இந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கான நாம் தமிழர் கட்சியினர் மற்றும் நாம் தமிழர் தொழிற்சங்க பேரவை சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

மாவட்ட செய்தியாளர் அ.காஜா மைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad