திருப்பூரில் தமிழரை தாக்கிய வடமாநில தொழிலாளர்களுக்கு, தொழிற்சங்கம் சார்பாக கண்டனத்தை தெரிவித்துள்ளனர் - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 14 May 2026

திருப்பூரில் தமிழரை தாக்கிய வடமாநில தொழிலாளர்களுக்கு, தொழிற்சங்கம் சார்பாக கண்டனத்தை தெரிவித்துள்ளனர்


கடந்த திங்கட்கிழமையன்று திருப்பூர் செட்டிபாளையம் இந்திரா நகர் பேருந்து நிலையம் அருகில் அப்போது சேர்ந்த ஜெகதீஷ் என்ற நபர் நண்பர்களோடு பேசி கொண்டிருந்தார்  அங்கு கூடியிருந்த வடமாநில தொழிலாளர்கள் சிலர் சத்தமாக பேசி கொண்டிருந்த நிலையில் என்ன பிரச்சனை என்று ஜெகதீஸ்  அவர்களை பார்த்து  கேட்க கூலி பிரச்சினை கம்பெனிக்காரர்கள் கூலி தர மறுக்கிறார்கள் என்று ஜெகதீஷ் இடம் கூற சரி அமைதியாக சென்று சம்பந்தப்பட்ட துறையினரின் புகார் செய்யுங்கள் என்று அறிவுரை கூறிவிட்டு வந்துவிட்டார் இதில் அவர்கள் இவர் சொல்வதை என்னவென்று கேட்காமல் தாறுமாறாக பேச ஆரம்பித்தனர் இதையொட்டி ஜெகதீஷ் வந்து விட்டார் ஆனால் அந்த கூடி நின்ற வட மாநில தொழிலாளர்கள் 20க்கும் மேற்பட்டோர்  ஜெகதீசன் அடிக்க இதில் ஒரு சிலர் ஆயுதங்களை ஏந்தி அடித்ததில் ஜெகதீஷ்க்கு தலையில் காயம் காது பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது ஏற்பட்டு அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் இது சம்பந்தமாக திருப்பூர் மாவட்ட நாம் தமிழர் மின்னலாடை மற்றும் நூற்பாலை தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில இணை செயலாளர் கொ.மு.சுரேஷ் பாபு  தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் அரசு மருத்துவமனைக்கு சென்று காயமடைந்த ஜெகதீஷை சந்தித்து நடந்ததை கேட்டறிந்தனர் பிறகு தொழிற்சங்கத்தின் சார்பாக கண்டனத்தை தெரிவித்துள்ளனர்

  மாவட்ட செய்தியாளர் அ காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad