மே 13 அன்று வட மாநில தொழிலாளர்களால் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்து திருப்பூர் பாண்டியன் நகரில் நாம் தமிழர் தொழிற்சங்கம் பேரவை சார்பாக ஆர்ப்பாட்டம் திருப்பூரில் வட மாநில தொழிலாளர்களால் தமிழர் தாக்கப்படுவதை தடுக்க, வடமாநிலத்தவரின் ஆதிக்கத்தை தடுக்க, வடவர்கள் வருகையை நெறிப்படுத்த மே 13ம் தேதி அன்று
பாண்டியநகர் பகுதியில் ஆர்பாட்டம் நடத்த அனுமதி கோரி நாம் தமிழர் பின்னலாடை மற்றும் நூற்பாலை தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில இணை செயலாளர் கொ.மு. சுரேஷ்பாபு அவர்கள் தலைமையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தொழிற்சங்கத்தினர் திருப்பூர் 15 வேலம்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் திருமுருகன் பூண்டி காவல் ஆய்வாளர் ஆகியோரிடம் மனு அளித்தனர் அந்த மனுவில் கூறியிருப்பதாவது 11.5 26 திங்கள் அன்று திருப்பூர் செட்டிபாளையம் இந்திரா நகர் பேருந்து நிலையம் அருகில் அந்த பகுதியை சேர்ந்த ஜெகதீஷ் என்பவர் நின்று நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்த நிலையில் அங்கு இருந்த வட மாநில தொழிலாளர்கள் அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் இதில் ஜெகதீஷ் மண்டை உடைந்தது காயமடைந்த நி லையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இதை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் ஒலிபெருக்கி பயன்படுத்த மே 13 மாலை 5 மணி முதல் 7 மணி வரை பாண்டியன் நகர் பேருந்து நிறுத்தத்தில் ஆர்பாட்டம் நடத்த அனுமதி அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:
Post a Comment